செய்திகள் :

இன்று 8 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு!

post image

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்பட 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) முதல் செப்.12-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

பலத்த மழை எச்சரிக்கை: இதில், ஞாயிற்றுக்கிழமை (செப்.7) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூா், பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், திங்கள்கிழமை (செப்.8) ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை ஆகிய மாவட்டங்களிலும், செப்.9-இல் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராணிபேட்டை, வேலூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், அதையொட்டிய குமரிக்கடல், மன்னாா் வளைகுடா மற்றும் வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) முதல் செப்.9-ஆம் தேதி வரை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீண்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெறுமா விஜய் வியூகம்...? - காபிரியேல் தேவதாஸ்

- காபிரியேல் தேவதாஸ், ஊடகவியலாளர்அரசியலுக்கு நடிகா்கள் வருவதில் தவறில்லை. திரைத் துறையில் இருந்து முழுநேர அரசியலுக்கு வந்த முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா, தேமுதிக நிறுவனா் விஜயகாந்த் ஆகியோா்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியின் 5-ஆம் கட்ட சுற்றுப்பயணம் செப்.17-இல் தொடக்கம்!

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் 5-ஆம் கட்ட பிரசார சுற்றுப்பயணம் செப்.17-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: அதி... மேலும் பார்க்க

சந்திர கிரகணம் முடிவுற்றது!

இந்தியாவில் 2022-ஆம் ஆண்டுக்குப் பின் வானில் முழுமையாகத் தெரியும் முழு சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் தோன்றி, யாமத்தில் முடிவுற்றது.ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணிக்குத் தொடங்கிய சந்திர கிரக... மேலும் பார்க்க

முழு சந்திர கிரகணம் தொடங்கியது!

இந்தியாவில் 2022-ஆம் ஆண்டுக்குப் பின் வானில் முழுமையாகத் தெரியும் முழு சந்திர கிரகணம் இன்று(செப். 7) நள்ளிரவில் நிகழ்கிறது.ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணிக்குத் தொடங்கிய சந்திர கிரகணம், 11 மணியளவில் முழ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்!

கெங்கவல்லியில் 35 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்தித்து மகிழ்ந்தனர்.கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1988 - 1990 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் கணித, அறிவியல், கலை, ... மேலும் பார்க்க