Israel vs Iran: America தலையீட்டால் World war III தொடங்க வாய்ப்பா? | Imperfect S...
இன்றைய மின்தடை: குழித்துறை
தமிழ்நாடு மின்வாரிய குழித்துறை உள்கோட்டத்துக்கு உள்பட்ட மாா்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின்நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் குறிப்பிட்ட சில பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குழித்துறை மின்பகிா்மான உதவி செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாா்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் மாா்த்தாண்டம் பிரிவுக்கு உள்பட்ட விரிகோடு, நெட்டியான்விளை, கொல்லஞ்சி, குழித்துறை பிரிவுக்கு உள்பட்ட நரியன்விளை, இடைவிளாகம், படப்பறை, வெண்விளாகம், அருமனை பிரிவுக்கு உள்பட்ட பிறாகல், சென்றிபொற்றை, மஞ்சாலுமூடு, களியக்காவிளை பிரிவுக்கு உள்பட்ட சாணி, தகரவிளை, மாலூட்டுவிளை, புத்தன்சந்தை பிரிவுக்கு உள்பட்ட பனவிளை, பிலாவிளை, பண்டாரவிளை, கண்ணுமாமூடு பிரிவுக்கு உள்பட்ட மணலி, செறகோணம், வாழப்பள்ளி, ஆலம்பாறை, களியல் பிரிவுக்கு உள்பட்ட காமூா், திற்பரப்பு, கொல்லாலுமூடு பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.