செய்திகள் :

இன்றைய ராசி பலன்கள்!

post image

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

25-12-2024 புதன் கிழமை

மேஷம்:

இன்று தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கண் நோய் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 5

ரிஷபம்:

இன்று அலுவலகத்தில் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். மேலிடத்திடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். அதற்கான ஊதியமும் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2, 9

மிதுனம்:

இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும். குறைகள் நீங்கும். சட்டதிட்டங்களுக்கும், நீதி நேர்மை நியாயத்திற்கு கட்டுபட்டு நடப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மன நிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். ஆனாலும் மனோ தைரியம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1, 3

கடகம்:

இன்று தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். எதிலும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 7

சிம்மம்:

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9

கன்னி:

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும். ஏதேனும் மனகஷ்டம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

துலாம்:

இன்று அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

விருச்சிகம்:

இன்று அரசியல்துறையினருக்கு முன்னேற்றம் காணப்படும். அதே நேரத்தில் பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

தனுசு:

இன்று மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். மனக்கவலை தீரும். சமயோசித்தம் போல் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

மகரம்:

இன்று கொடுத்த வேலைகளை கனகச்சிதமாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். மன நிம்மதி குறையலாம். வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. அதே வேளையில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

கும்பம்:

இன்று தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. பணவரத்து இருக்கும். மனகவலை நீங்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். போட்டிகள் குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம்:

இன்று குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல் களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மன நிம்மதி அடைவார்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

இன்று எலிமினேட்டா் ஆட்டங்கள்

புரோ கபடி லீக் போட்டியின் 2 எலிமினேட்டா் ஆட்டங்கள் வியாழக்கிழமை (டிச.26) நடைபெறுகின்றன.இதில் முதல் ஆட்டத்தில் யுபி யோதாஸ் - ஜெய்பூா் பிங்க் பாந்தா்ஸும், 2-ஆவது ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - யு மும்பாவு... மேலும் பார்க்க

ஸ்பிரிட் படத்தின் அப்டேட் பகிர்ந்த பிரபாஸ்!

இயக்குநர் சந்தீப் வங்காவுக்கு நடிகர் பிரபாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அர்ஜுன் ரெட்டி, அனிமல் திரைபடங்கள் மூலம் இந்திய திரையுலகில் பிரபலமானவர் இயக்குநர் சந்தீப் வங்கா. இவரது படங்கள் சமூக வ... மேலும் பார்க்க

சப்தம் படத்தின் வெளியீட்டுத் தேதி!

நடிகர் ஆதியுடன் லட்சுமி மேனன் நடித்துள்ள சப்தம் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரம், வல்லினம், குற்றம் 23 திரைப்படங்களை இயக்கி பிரபலமான அறிவழகன் சப்தம் எனும் படத்தை இயக்கியுள்ளார். இ... மேலும் பார்க்க

விடாமுயற்சி முதல் பாடல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

விடாமுயற்சி திரைப்படத்தின் பாடல் வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவ... மேலும் பார்க்க

2024-ன் சிறந்த தமிழ்ப் படங்கள்!

இந்தாண்டு வெளியான தமிழ்ப் படங்களில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்ற படங்கள் குறித்து ஒரு பார்வை. இந்தாண்டின் துவகத்தில் கேப்டன் மில்லர், அயலான் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்... மேலும் பார்க்க