பாட் கம்மின்ஸ்தான் தலைசிறந்த கேப்டன்..! தினேஷ் கார்த்திக் புகழாரம்!
இன்றைய ராசி பலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.
11.01.2025 (சனிக்கிழமை)
மேஷம்
இன்று மனைவி, பிள்ளைகளாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். உடல் சோர்வு, எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவற்ற நிலைகளால் மனக்குழப்பங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3
ரிஷபம்
இன்று எதிர்பாராத பயணங்கள் உண்டாகி தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். உணவு விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. குடும்பம், பொருளாதாரநிலை விசயத்தில் அடுத்தவர் தலையீடு வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
மிதுனம்
இன்று குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களால் ஒற்றுமைக்குறைவுகள் உண்டாகும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகளும், புத்திரர்களால் மனநிம்மதியற்ற நிலையும் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
கடகம்
இன்று பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்திசெய்ய கடன் வாங்க நேரிடும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது உத்தமம். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகள் உண்டாவதைத் தவிர்க்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
சிம்மம்
இன்று வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்-வாங்கல் கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
கன்னி
இன்று கொடுக்கல் -வாங்கலில் மிகவும் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். பணவிஷயத்தில் பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பதும், வாக்குறுதிகளைக் கொடுப்பதும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். வம்பு வழக்குகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
துலாம்
இன்று தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகளும், போட்டிகளும் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலும் உண்டாகும். வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தமுடியாத சூழ்நிலைகளும் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6
விருச்சிகம்
இன்று கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாட்டால் அபிவிருத்தி குறையும் என்பதால் முடிந்தவரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் எந்தவொரு காரியத்திலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது உத்தமம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
தனுசு
இன்று தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் வீண் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலப்பலனை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எடுக்கும் பணிகளை சரிவரச்செய்து முடிக்க முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
மகரம்
இன்று எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தடை தாமதங்களுக்குப்பின் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வதன்மூலம் வீண் பிரச்சினைகள் உண்டாவதைத் தவிர்க்க முடியும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
கும்பம்
இன்று அதிகநேரம் உழைக்க வேண்டியிருப்பதால் உடல்நிலை சோர்வடையும். அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டி இருக்கும். எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பெண்கள் உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச்செலவுகளை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
மீனம்
இன்று திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். தாய் வழி உற்றார்-உறவினர்களை அனுசரித்துச்செல்ல வேண்டிவரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9