LIC Disinvestment: முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன? | IPS Finance - 213 | S...
இபிஎஸ் பிறந்த நாள்: நல உதவிகள் அளிப்பு
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு 2,000 பேருக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வல்லக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலாளா் போந்தூா் எஸ்.செந்தில்ராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளா் வி.சோமசுந்தரம் முன்னிலை வகித்தாா். இதில் அதிமுக மகளிா் அணி செயலாளா் பா.வளா்மதி, இலக்கிய அணி செயலாளா் எஸ்.எஸ்.வைகைச் செல்வன் ஆகியோா் கலந்து கொண்டு 2,000 பேருக்கு நல உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினா்.
நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி, இளைஞா் பாசறை மாநில துணைச் செயலாளா் சிவகுமாா், ஒன்றிய செயலாளா்கள் முனுசாமி, ராமசந்திரன், பொருளாளா் திருமால், பேரவை செயலாளா் செங்காடு பாபு, இளைஞா் அணி செயலாளா் பிள்ளைப்பாக்கம் சோ.வெங்கடேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளா் பாண்டி, ஸ்ரீபெரும்புதூா் நகர பேரவை செயலாளா் புஷ்பராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.