ஐபிஎல் கூட்ட நெரிசல்: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட பெங்களூரு காவல் ஆணையருக்கு மீண்...
இமாச்சல் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகா: மாநிலத்தின் குழந்தையாக அறிவிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகாவை, மாநிலத்தின் குழந்தையாக அரசு அறிவித்து, அவரது வாழ்க்கை, கல்வி என அனைத்துக்கும் அரசே பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.
தல்வாரா கிராமத்தில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1ஆம் தேதி நேரிட்ட பயங்கர வெள்ளத்தின்போது, தனது பெற்றோர் மற்றும் பாட்டியை இழந்த இந்தக் குழந்தை மீட்புப் படையினரால் மீட்கப்பட்டிருந்தது.
இந்தக் குழந்தையின் தந்தை ரமேஷ் பலியான நிலையில், அவரது தாய் ராதா, பாட்டியின் நிலை என்னவானது என்பது இதுவரை தெரியவில்லை. அவர்கள் இதுவரை திரும்பாத நிலையில் உடலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், இமாச்சல மாநிலத்தின் முதல்வர் சுக்-ஆஷ்ரய் யோஜனா திட்டத்தின் கீழ், நீதிகா, மாநிலத்தின் குழந்தையாக அறிவிக்கப்பட்டார்.
இந்தக் குழந்தையை வளர்த்தெடுப்பது, கல்வி மற்றும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது மாநிலத்தின் கடமை என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.