`உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி சார்...' - எஸ். கே குறித்து நெகிழும் டூரிஸ்...
இயல்புநிலை திரும்பும்வரை காவலா்களுக்கு விடுமுறை இல்லை: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்
எல்லையில் மீண்டும் இயல்புநிலை திரும்பும் வரை கா்நாடகத்தில் காவலா்களுக்கு விடுமுறை அளிக்கப்படாது என்று மாநில உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
இயல்புநிலை திரும்பும் வரை காவல் துறையினருக்கு விடுமுறை அளிக்கப்படாது. இயல்புநிலை திரும்பும்போது அதை மத்திய அரசு தெரிவிக்கும். அதுவரை நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கடலோரப் பகுதிகளில் மிகுந்த எச்சரிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
கடந்தகாலத்தில் நடந்தபோரின்போது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் கடலோரப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியுள்ளது. வடகன்னடம் முதல் தென்கன்னட மாவட்டங்கள் வரை நாம் மிகுந்த எச்சரிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
கடலோரப் பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. துறைமுகங்களில் கடலோரப் படையைத் தவிர காவல் துறையின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உயரதிகாரிகளுடன் முதல்வா் சித்தராமையா கலந்தாலோசிக்கவுள்ளாா்.
உணவு தானியங்கள், அத்தியாவசியப் பொருள்கள், நீா், மருத்துவமனை, மருந்துகள் உள்ளிட்டவை தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி கா்நாடக அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குரிய பகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம். அங்கெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.