What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன்
சேலம்: இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும் என சேலத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சேலம் பெருங்கோட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு மற்றும் சேலம் மாநகர், தர்மபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு ஆகிய மாவட்டங்களின் மாவட்ட தலைவர்கள், மண்டல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் என பலரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசும்போது, 2026 இல் பாஜக, அதிமுக மற்றும் தோழமைக் கட்சிகளோடு இணைந்து வெற்றி பெறும் எழுச்சி தெரிகிறது. அகில இந்திய தலைமையின் முடிவுக்கு கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். தேர்தலுக்காக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
சமூக வலைதளங்களில் முழுமையாக செயல்பட வேண்டும்
சமூக வலைத்தளங்களில் ஒரு மீம்ஸ் போட்டால், உடனே இன்னொரு மீம்ஸ் வந்து விடுகிறது. அகில இந்திய தலைமை சொன்னபடி, சமூக வலைதளங்களில் முழுமையாக செயல்பட வேண்டும்.
தவறான மீம்ஸ் போட்டால் திமுக கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை கைது செய்து விடுகிறது. சமூக வலைத்தளங்களில் இயங்கும் அனைவரும் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.
கூட்டணி பற்றி விமர்சனம் செய்தால் வேறு மாதிரி போய்விடும். நம் கூட்டணி இறுதியான உறுதியான கூட்டணி என்பதை மறந்து விடக் கூடாது.
தாமரை மலர்ந்தே தீரும்
இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும். சந்தர்ப்பவாத கூட்டணி திமுக தலைமையில் அமைந்துள்ளது. எங்களது நியாயமான, நேர்மையான ஊழலற்ற கூட்டணி என்பதை சொல்லிக் கொள்கிறோம்.
நிச்சயம் வெற்றி
தேசிய ஜனநாயக ஆட்சி வருவதற்கு தயாராக இருக்க வேண்டும். பல தியாகங்களால்தான் பாஜக வளர்ந்துள்ளது. அந்த தியாகத்திற்கு பெருமை சேர்க்க அனைத்து நிர்வாகிகளும் ஒன்றுபட்டு செயல்பட்டு பூத் அளவில் பணியைத் தொடங்க வேண்டும். பூத் செம்மைபடுத்தினால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.
எத்தனை தொகுதிகள்?
எத்தனை தொகுதிகள் எந்த இடம் என்பதை அமித்ஷா, இபிஎஸ் தான் முடிவு செய்வார்கள். என்னுடைய அதிகாரம், நிலை என்பது தொண்டர்களை பாதுகாப்பது என்பதுதான். கட்சியை வளர்க்க வேண்டும் என்பதுதான். தொண்டர்களுக்கு காலி அடிப்பட்டால், அது எனக்கு கண்ணிலே ஏற்படும் வலி போன்றது. நான் தொண்டர்களை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறேன். எனக்கு மேலே இருக்கிற தலைமை எடுக்கும் முடிவை ஏற்பதுதான் கட்சி நிர்வாகிகளின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.
அதிக நிதி வேண்டும் என்பதில் தயக்கம் இல்லை
மேலும், தமிழக அரசுக்கு அதிக அதிகாரம் வேண்டும், அதிக நிதி வேண்டும் என்பதில் எங்களுக்கு தயக்கம் கிடையாது. மற்ற மாநிலங்களை விட அதிக நிதி வேண்டும் என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. பொதுமக்களின் எதிர்ப்பை திசை திருப்ப வேண்டும் என்றே தீர்மானங்கள் போடப்படுகிறது.
குலத்தொழில் திட்டத்தை தமிழ்நாடு அனுமதிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீட் தேர்வை யாராலும் ரத்து செய்ய முடியாது
நீட் தேர்வை யாராலும் ரத்து செய்ய முடியாது. ஆனால் அதற்கு தீர்மானம் போடுகிறார்கள்.
கச்சத்தீவு மீண்டும் வராது
கச்சத்தீவு மீண்டும் வராது.ஆனால் அதற்கு தீர்மானம் போடுகிறார்கள். பிரதமர் நினைத்தால் மட்டுமே நமக்கு கிடைக்கும். தீர்மானங்களை மட்டுமே போட்டால் போதுமா?. மத்திய அரசோடு கலந்து பேசி நல்ல உறவு வைத்திருந்தால் மட்டுமே ஆட்சி நன்றாக இருக்கும்.
மக்களின் மனநிலையில் மாற்றம்
18 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இருந்து போது பேசாமல் இப்போது மாநில சுயாட்சி பற்றி திமுக பேசி வருகிறது. இதற்கு எல்லாம் பதிலளிக்காமல் மக்களின் மனதை மடைமாற்றவே இதுபோன்ற தீர்மானங்கள் போடப்படுகின்றன. ஆனால் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. ஆட்சி மாற்றம் ஏற்படுவது நிச்சயம் உறுதி. சிறு கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றார்.