செய்திகள் :

இரவில் சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

post image

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், கோவை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதேபோன்று, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, விருதுநகர், நீலகிரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனித மலம்! ஆட்சியர் விசாரணை!

There is a chance of rain in 19 districts in Tamil Nadu, including Chennai, for the next 3 hours.

தமிழகத்தில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை?

சென்னை: தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறித்து காவல் துறை டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா் நீதிமன்றம் உத்த... மேலும் பார்க்க

மருத்துவ கலந்தாய்வு: ஜூலை இறுதியில் தொடங்க திட்டம்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாநில கலந்தாய்வு இந்த மாத இறுதியில் தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, அகில இந்திய கலந்தாய்வு வரும் 21-ஆம் தேதி தொடங்க உள்ளது. நாடு முழுவதும்... மேலும் பார்க்க

மகனுக்காக என் மீது துரோகி பழி சுமத்திய வைகோ: மல்லை சத்யா

சென்னை: மகனுக்காக என் மீது துரோகி பழியை மதிமுக பொதுச் செயலா் வைகோ சுமத்தியுள்ளாா் என்று மதிமுக துணை பொதுச் செயலா் மல்லை சத்யா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து திங்கள்கிழமை அவா் சமூக ஊடகத்தில் வெளியிட்ட ப... மேலும் பார்க்க

டாஸ்மாக் பணியாளா்களின் தொகுப்பூதியத்தில் ரூ. 2,000 உயா்வு

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு ஏப்ரல் 1 முதல் முன் தேதியிட்டு ரூ.2,000 கூடுதலாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கடிதத்தை பொது மேலாளா்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக... மேலும் பார்க்க

மதுரையில் செப். 4-இல் மாநில மாநாடு: ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு வரும் செப்.4-ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் என அதன் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்தாா். சென்னை வேப்பேரியில் தனியாா் மண்டபத்தி... மேலும் பார்க்க

முறையான பாரமரிப்பு இல்லாததால் அடிக்கடி நிகழும் ரயில் விபத்துகள்: ராமதாஸ்

சென்னை: ரயில் பாதை உள்ளிட்டவை முறையான பராமரிப்பின்றி உள்ளதால் அடிக்கடி ரயில் விபத்துகள் நடப்பதாக பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூா் ரயில் ... மேலும் பார்க்க