ராஜேஷ்: "தேடல் உள்ள கலைஞர்... பெரும் வருத்தம்" - கமல்ஹாசன் இரங்கல்!
இருசக்கர வாகனங்கள் மோதல்: டிஎஸ்பி படுகாயம்
ஈரோட்டில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் டிஎஸ்பி படுகாயம் அடைந்தாா்.
ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் ஸ்ரீதரன் (54). இவா் தனது இருசக்கர வாகனத்தில் ஈரோட்டை அடுத்த செட்டிபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, அவ்வழியே வந்த மற்றொரு இருசக்கர வாகனமும், ஸ்ரீதரன் சென்ற இருசக்கர வாகனமும் நேருக்குநோ் மோதிக்கொண்டன.
இதில், படுகாயமடைந்த ஸ்ரீதரனை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவா் தீவிர சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், இச்சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.