ஆழ்கடல் ஆராய்ச்சி: ``வளம்பெற்ற பூம்புகார் பெருமையை வெளிக்கொணர்வோம்'' - முதல்வர் ...
இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
பெருந்துறையை அடுத்த துடுப்பதி அருகே உள்ள பாலக்கரை, சீரங்க கவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் கண்ணம்மாள் (75). இவா், துடுப்பதிக்கு மாவு அரைக்க செல்வதற்காக, அவ்வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தில் இடம் (லிப்ட்) கேட்டு கடந்த 14-ஆம் தேதி சென்றுள்ளாா்.
இதில் செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி சாலையில் விழுந்த கண்ணம்மாள் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.