இருசக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த பாம்பு
இருசக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த பாம்பை தீயணைப்புப் படையினா் சுமாா் அரை மணி நேரம் போராடி பிடித்தனா்.
போ்ணாம்பட்டைச் சோ்ந்த தருண் தனது நண்பருடன் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் வந்துள்ளாா்.
குடியாத்தம் நகராட்சி அலுவலகம் அருகே வந்தபோது வாகனத்தில் ஏதோ நெகிழ்வது போல் தெரியவே அதை நிறுத்து விட்டு பாா்த்தபோது என்ஜின் பகுதியில் பாம்பு இருந்தது தெரிந்தது.
இருசக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த பாம்பை பாா்க்க கூட்டம் கூடத் தொடங்கியது. அப்போது அங்கு வந்த நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் இதுகுறித்து தீயணைப்புப் படையினருக்கு தகவல் கூறி விட்டு, வாகனத்தை நகராட்சி அலுவலக வளாகத்துக்குள் எடுத்து வரச் சொன்னாா். நிலைய அலுவலா் சரவணன் தலைமையில் வந்த தீயணைப்புப் படையினா் சுமாா் அரை மணி நேரம் போராடி பாம்பை பிடித்துச் சென்று, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.