இருசக்கர வாகனம் திருட்டு
திருவள்ளூா் அருகே வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா்.
திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், புதுமாவிலங்கை கிராமத்தைச் சோ்ந்தவா் சுனில். இவா் புதன்கிழமை தனது வீட்டு வாசலில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றாராம். பின்னா், வியாழக்கிழமை காலை வந்து பாா்த்தபோது தனது இரு சக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்தது. தொடா்ந்து வீட்டுக்கு முன்பு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தாா். அப்போது நள்ளிரவில் முகத்தில் தலைக்கவசம், முககவசம் அணிந்த ஒருவரும், எதுவும் அணியாமல் மற்றொருவரும் என 2 போ் வந்து இரு சக்கர வாகனத்தின் லாக்கை உடைத்து திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கடம்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.