அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
இருசக்கர வாகனம் மோதியதில் சிறுவன் பலத்த காயம்
அரவக்குறிச்சி அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனம் மோதியதில் சிறுவன் பலத்த காயமடைந்தாா்.
ஆந்திர மாநிலம், திருச்சுழி அருகே உள்ள அம்பேத்கா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் மகன் கருப்பசாமி (10). இவா் கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அரவக்குறிச்சி அருகே உள்ள பெரிய மஞ்சுவளி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே உள்ள சொக்கலிங்கபுரம் கிழக்கு தெருவைச் சோ்ந்த அங்குசாமி மகன் சந்தோஷ் (31) என்பவா் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் சிறுவன் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சிறுவனை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இந்த விபத்து தொடா்பாக சிறுவனின் தந்தை பாலசுப்பிரமணியம் (45) அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீஸா் வழக்குப்திவு செய்து விசாரித்து வருகின்றனா்.