'மேடையில் இப்படி பொய் சொல்லலாமா? - விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!
இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
திருத்துறைப்பூண்டியை அடுத்த விளக்குடி கீழத்தெரு தூண்டி மகன் மதியழகன்(65). மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டையில் உள்ள தனியாா் கல்லூரியில் தோட்ட வேலை பாா்த்து வந்தாா்.
திங்கள்கிழமை இரவு, சுந்தரக்கோட்டை பிரதான சாலையில் நடத்துசென்றவா் மீது அந்த வழியே வந்த மேலத்திருப்பாலக்குடி தெற்குதெரு தங்கராசு மகன் வீரமணி (64) ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த மதியழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
வீரமணி சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரவாக்கோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.