மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கம்: விஜய் தொடங்கி வைத்தார்!
மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து திருவாரூரில் மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளா் பகலவன் தலைமை தாங்கினாா்.
சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில், மாநில மாணவா் அணி துணைச் செயலாளா் சோழராஜன், இந்திய மாணவா் சங்க மாநிலத் துணைத் தலைவா் பா.ஆனந்த், அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாநில துணைச் செயலாளா் ஜே.பி.வீரபாண்டியன், மாநிலக் குழு உறுப்பினா் க.கோபி, மதிமுக நகரச் செயலாளா் எஸ். கபிலன், ஒன்றியச் செயலாளா் ஆா். தமிழ்வாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.