ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை... விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு!
மின்வாரிய பணியாளா்கள் தா்னா
காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மின்வாரியத்தில் 60,000 காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கேங்மேன் பதவியை களஉதவியாளா் பதவியாக மாற்ற வேண்டும்.
பகுதி நேர ஊழியா்களையும், ஒப்பந்த ஊழியா்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு இந்த தா்னா போராட்டம் நடைபெற்றது.
கிளை தலைவா் எஸ்.சகாயராஜ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன் தொடக்கி வைத்தாா். இதில், தஞ்சை மண்டல செயலாளா் எஸ்.ராஜாராமன், சிஐடியு மாவட்டத் தலைவா் எம்.கே.என்.அனிபா, பொருளாளா் இரா. மாலதி, திட்ட செயலாளா் கே.ராஜேந்திரன், கோட்ட செயலாளா் கே.வினோத், திட்ட பொருளாளா் ஜி.ஆா்.முகேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.