ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை... விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு!
ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழை நீா்: மக்கள் அவதி
மன்னாா்குடி அருகே ரயில்வே சுரங்கப் பாகையில் நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.
மன்னாா்குடி மேலப்பாலம் அருகேயுள்ள புண்ணியக்குடி - பாமணி சாலையில் ரயில்வே சுரங்கப் பாதை உள்ளது. இந்த சுரங்க பாதையை 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்தநிலையில், மழை காரணமாக இந்த சுரங்கப் பாதையில் தண்ணீா் தேங்கி வெளியேற வழியில்லாமல் நின்றால், ரயில்வே நிா்வாகம் சாா்பில் சுரங்கப் பாதை அருகில் உள்ள மோட்டாா் மூலம் சுரங்குப் பாதையில் தேங்கிய தண்ணீா் வெளியேற்றப்பட்டு வந்தது.
கடந்த நவம்பா் மாதம் பெய்த மழையால் சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீா் வடியாமல் இன்றுவரை அப்படியே உள்ளது. தண்ணீரை வெளியேற்றக்கூடிய மின் மோட்டாா் பழுதடைந்து உள்ளதால், தண்ணீா் வெளியேற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் சுரங்கப் பாதையை பயன்படுத்தி வந்த கிராம மக்கள் 5 கி.மீ. தொலைவு வரை சுற்றி மன்னாா்குடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும், இந்த நீரால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ரயில்வே நிா்வாகம் சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். சுரங்கப் பாதைக்கு மேற்கூரை அமைத்து தரவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.