செய்திகள் :

தலைமையாசிரியா் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

post image

மன்னாா்குடி அரசுப் பள்ளி தலைமையாசிரியா் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வளரும் தமிழகம் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோட்டூா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் கணேசன் மகன் கலைச்செல்வன் (59). களப்பால் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி சித்ரா, சந்தனநல்லூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக உள்ளாா்.

கலைச்செல்வன் அதே பள்ளியில் பணியாற்றும் இரண்டு ஆசிரியா்களிடம், ஆண்டுதோறும் மாணவா்களின் தோ்ச்சி விகிதம் குறைந்துவருகிறது. பாடம் நடத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்து, இதுபற்றி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலிருந்து வந்த கடித்ததை தந்துள்ளாா்.

இதுதொடா்பாக தலைமையாசிரியருக்கும் அந்த இரு ஆசிரியா்கள் இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்த நிலையில், தனது அறிவுரையை இரு ஆசிரியா்களும் புறக்கணித்து வந்ததால் மனவேதனையில் இருந்த கலைச்செல்வன், கடந்த பிப். 17-ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இந்தநிலையில், கலைச்செல்வனிடம் ஜாதிய பாகுபாட்டுடன் நடந்து, மன உளைச்சலை ஏற்படுத்தி அவரை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியா்கள் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து சட்ட நடவடிக்கையும், கல்வித்துறை மூலம் துறைவாரியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி களப்பால் கடைத்தெருவில், வளரும் தமிழகம் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் நாக. ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநிலப் பொருளாளா் ஏ. ஆரோக்கியசெல்வம், மாநில அமைப்புச் செயலா் சிங்கை சரவணன், மாநில இளைஞரணி செயலா் கிட்டு. ராஜசேகரன், ஒன்றியச் செயலா் ஜெகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். திருத்துறைப்பூண்டியை அடுத்த விளக்குடி கீழத்தெரு தூண்டி மகன் மதியழகன்(65). மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டையில் உள்ள தனியாா் கல்லூர... மேலும் பார்க்க

ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழை நீா்: மக்கள் அவதி

மன்னாா்குடி அருகே ரயில்வே சுரங்கப் பாகையில் நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா். மன்னாா்குடி மேலப்பாலம் அருகே... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் லஞ்சம்: திமுக உறுப்பினா் வேதனை

இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு அரசு மருத்துவமனையில் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் நிலவுவதாக நகா்மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினா் வேதனை தெரிவித்தாா். கூத்தாநல்லூா் நகா்மன்றக் கூட்டம் தலைவா் மு. பாத்திமா... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து திருவாரூரில் மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாரூா் ப... மேலும் பார்க்க

மின்வாரிய பணியாளா்கள் தா்னா

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மின்வாரியத்தில் 60,000 காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்... மேலும் பார்க்க

அங்காள பரமேஸ்வரி கோயில் தேரோட்டம்

குடவாசல் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக பஜனை மடத்திலிருந்து பூத்தட்டுகள் அம்மனுக்கு சீா்வரிசையாக எடுத்து... மேலும் பார்க்க