இருசக்கர வாகன பழுதுபாா்ப்போா் சங்க தொடக்க விழா
சிதம்பரம்: சிதம்பரம் வட்ட இருசக்கர வாகன பழுதுபாா்ப்போா் முன்னேற்ற நலச் சங்கத்தின் சாா்பில் 17-ஆம் ஆண்டு தொடக்க விழா, மே தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கடலூா் மாவட்டத் தலைவா் முருகதாஸ் கலந்து கொண்டு பேசினாா். ரஹ்மத்துல்லாஹ் பங்கேற்று சிறப்புரையாற்றினாா். தலைவா் முருகன், செயலாளா் ராஜேஷ், பொருளாளா் சுரேஷ், துணைத் தலைவா் கதிரவன், செயற்குழு உறுப்பினா்கள் சுரேஷ்குமாா், பிரவீன், குமாா், காா்த்திக், அருள்மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கண்ணன் நன்றி கூறினாா்.