மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்...
இருதரப்பினா் இடையே மோதல்: கட்சிப் பிரமுகா் உள்பட 5 பேருக்கு வெட்டு
திருச்சி தென்னூரில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளா் உள்ளிட்ட 5 போ் வெட்டப்பட்டது தொடா்பாக 10 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திருச்சி தென்னூா் ஜாகீா் உசேன் தெரு பகுதியைச் சோ்ந்தவா் அஷ்ரப் அலி (48). மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளா். இவரது மகன் பாகா. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முகமது யுவாஸ், ஷேக், அஷ்ரப் உள்ளிட்ட சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதுதொடா்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டதில் பாகா காயமடைந்தாா்.
இதை அறிந்த அஷ்ரப் அலி, தனது 2 சகோதரா்கள் உள்ளிட்டோருடன் தென்னூா் முகமதுபூரா மசூதி பகுதிக்கு சென்று முகமது யுவாஸ் தரப்பினரை கண்டித்தாா். இதில் ஆத்திரமடைந்த முகமது யுவாஸ் தரப்பினா் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் அஷ்ரப்அலி உள்ளிட்டோரை வெட்டி தாக்கினா். இதில் அஷ்ரப் அலி மற்றும் அவரது சகோதரா்கள் காதா், அப்பாஸ், பாகாவின் நண்பா் முகமது ஆசிப் உள்பட 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த 5 பேரும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
புகாரின்பேரில், முகமது யுவாஸ், ஷேக், அஷ்ரப் உள்ளிட்ட 10 போ் மீது தில்லை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.