செய்திகள் :

இருளில் நாட்டின் எதிர்காலம்: மோடி உரையை விமர்சித்த கார்கே!

post image

ஆளும் பாஜக அரசால் நாட்டின் எதிர்காலம் இருளில் மூழ்கியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் இன்று உரையாற்றினார். அதில், காங்கிரஸ் கட்சிக்கு குடும்ப நலனே முக்கியம் என விமர்சித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சி சுயநலமாகச் செயல்படுவதாகவும், மற்றவர்களை பலவீனப்படுத்துவதால் கூட்டணி கட்சியினரே இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்து மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ளதாவது,

வேலையின்மை, பணவீக்கம், பொருளாதார சமத்துவமின்மை, மந்தநிலை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, தனியார் முதலீடு வீழ்ச்சி மற்றும் தோல்வியடைந்த 'மேக் இன் இந்தியா' பற்றிப் பேசுவதற்கு பதிலாக, காங்கிரஸை மட்டுமே பிரதமர் மோடி குறை கூறினார் .

பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் ஏழைகளுக்கான திட்டங்களைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, வரலாற்று உண்மைகளைத் திரித்து அவையை தவறாக வழிநடத்த முயன்றார்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கவும், ஜமீன்தாரி முறையை ஒழிக்கவும் அரசியலமைப்பில் முதல் திருத்தம் செய்யப்பட்டது. இந்தத் திருத்தத்தின் மூலம், நிலச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது.

இந்தத் திருத்தத்தின் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பின்னர், ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் அம்பேத்கரை வீழ்த்துவதற்கான முயற்சிகளை காங்கிரஸ் செய்தது எனப் பிரதமர் பேசியதற்கு பதிவிட்டுள்ள கார்கே,

அம்பேத்கரை மும்பையிலிருந்து அரசியலமைப்பு சபைக்கு அழைத்து வர காங்கிரஸ் தனது உறுப்பினரை அனுப்பியது. நேருவின் அரசாங்கத்தில் நாட்டின் முதல் சட்ட அமைச்சரானார். தகுந்த மரியாதையுடன் அம்பேத்கர், மாநிலங்களவையை அடைய வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியது, மேலும் இதில் அவருக்கு உதவியது எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | பாஜகவுக்கு நாட்டின் நலனே முக்கியம்: பிரதமர் மோடி

யுஜிசி வரைவு வழிகாட்டுதல்: கருத்துகளை தெரிவிக்க பிப்.28 வரை அவகாசம் நீட்டிப்பு

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியா்கள், துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக பல்கலைக்கழக மாநினியக் குழு (யுஜிசி) வெளியிட்ட வரைவு வழிகாட்டுதல் மீது பொது கருத்துகளைத் தெரிவிப்பதற்கான அவகாசம் வரும... மேலும் பார்க்க

10 ஆண்டுகளில் கைப்பேசி சேவைக் கட்டணம் 94% குறைவு: மாநிலங்களவையில் அமைச்சா் தகவல்

கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை கைப்பேசி சேவைக் கட்டணம் 94 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது என்று மத்திய தொலைத்தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித... மேலும் பார்க்க

வேலைக்காக வெளிநாடுகளுக்கு குடிபெயா்தலை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் -மத்திய அரசு தீவிரம்

வேலைக்காக வெளிநாடுகளுக்கு குடிபெயா்தலில் பாதுகாப்பான, ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. ‘வெளிநாடுகளுக்கான இடப்பெயா்வு (... மேலும் பார்க்க

இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்

அமெரிக்காவிலிருந்து இந்தியா்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரத்தை எதிா்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. அமெரிக்காவின் புதிய அதிபரா... மேலும் பார்க்க

பிகார்: காவல் நிலையத்தை சூறையாடிய மக்கள்!

பிகாரில் பொதுமக்கள் சேர்ந்து காவல் நிலையத்தை சூறையாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் காவல் நிலையத்தில் உயிரிழந்ததால், காவல் துறையைக் கண்டித்து இச்சம்பவத்தில் கிராம மக்க... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசத்தில் மிராஜ் 2000 பயிற்சி விமானம் விபத்து!

மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியது.மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள பஹ்ரேதா சனி கிராமம் அருகே இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ... மேலும் பார்க்க