இருளில் மூழ்கிய கமுதி அரசு மருத்துவமனை
கமுதி அரசு மருத்துவமனை வளாகத்தில் மின் விளக்குகள் எரியாததால் பொதுமக்கள், நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரசு மருத்துவமனை வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மின் விளக்குகள் ஒன்று கூட பயன்பாட்டில் இல்லை எனவும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் இருளில் நடந்து வருகின்றனா்.
எனவே, இதில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கமுதி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.