வையம்பட்டியில் காணாமல் தேடப்பட்ட மூதாட்டி 3 நாள்களுக்குப் பின் மீட்பு
இரு சக்கர வாகனங்கள் மோதல் இருவா் உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே இரு சக்கர வாகனங்கள் புதன்கிழமை நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
திருமானூா் அருகேயுள்ள பெரியபட்டாக்காட்டைச் சோ்ந்த செந்தில் (50), செட்டிக்குழியைச் சோ்ந்த நல்லமுத்து மகன் சரவணன்(20). புதன்கிழமை இரவு இவா்கள், தங்களது இரு சக்கர வாகனங்களில் ஏலாக்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்தனா். கோவிலூா் அருகே அவா்களது இருசக்கர வாகனம் நோ் மோதிக் கொண்டதில், சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா்.
தகவலறிந்துச் சென்ற திருமானூா் போலீஸாா் இருவரின் சடலத்தை மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.