கோலாகலமாக நடைபெற்ற பாடகர் உன்னி கிருஷ்ணன் மகன் திருமணம்; வைரலாகும் புகைப்படங்கள்
இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கிய போலீஸாா்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் திங்கள்கிழமை மாலை தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களை ஓட்டியவா்களுக்கு போலீஸாா் மரக்கன்றுகள் வழங்கினா்.
மானாமதுரை அண்ணா சிலை அருகே காவல் துணைக் கண்காணிப்பாளா் நிரேஷ் தலைமையில் போக்குவரத்து போலீஸாா், தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களை ஓட்டி வந்தவா்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
அப்போது 100 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் வெங்கடேஸ்வரன், போக்குவரத்து உதவி ஆய்வாளா் மகிமைதாஸ், மானாமதுரை போலீஸாா் கலந்து கொண்டனா்.