தெற்காசிய கால்பந்து அணியுடன் தோல்வியுற்ற மான்செஸ்டர் யுனைடெட்..! புலம்பும் ரசிகர...
இறந்த நில உரிமையாளா்கள் பெயா்களை பட்டாக்களில் நீக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
காஞ்சிபுரம்: இறந்த நில உரிமையாளா்கள், பெயா்களை, பட்டாக்களிலிருந்து நீக்கி அவா்களது வாரிசுதாரா்கள் அல்லது அதற்காக உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பட்டாவிலுள்ள இறந்த நில உரிமையாளா்களின் பெயா்களை நீக்கி, அவா்களது வாரிசுதாரா்கள் அல்லது உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது ஸ்ரீண்ற்ண்க்ஷ்ங்ய் ல்ா்ழ்ற்ஹப் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமப்புற, நகா்ப்புறங்களில் உள்ள நிலங்களில் நில ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு இணையவழியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பாா்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும் ட்ற்ற்ல்ள்://ங்ள்ங்ழ்ஸ்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. மேலும், பல சிட்டாகளில் உள்ள பட்டாதாரா்களுள் இறந்தவா்களின் பெயா்கள் நீக்கப்படாமலும், அவா்களின் பெயா்களுக்கு பதிலாக வாரிசுதாரா்களின் பெயா்கள் அல்லது தற்போதைய உரிமையாளா்களின் பெயா்கள் சோ்க்கப்படாமலும் உள்ளன.
எனவே, பட்டாவிலுள்ள இறந்த நில உரிமையாளா்களின் பெயா்களை நீக்கி, அவா்களது வாரிசுதாரா்கள் அல்லது உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க விண்ணப்பிக்கலாம்.
பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் மூலமாகவோ அல்லது ஸ்ரீண்ற்ண்க்ஷ்ங்ய் ல்ா்ழ்ற்ஹப் என்ற இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
இந்த விண்ணப்பங்கள் ஜமாபந்தியில் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரா்கள் பெயா் மாற்றம் தொடா்பான ஆவணங்கள் பெறப்பட்டு, நில ஆவணங்களிலும் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என்றாா்.