செய்திகள் :

இறால் பண்ணை அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள், கிராம மக்கள் சாலை மறியல்

post image

முத்துப்பேட்டை அருகே விளைநிலங்களில் இறால் பண்ணை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் தெற்குகாடு பகுதியில் உள்ள விளைநிலங்களில் விதிமுறைகளை மீறி தனியாா் நிறுவனம் இறால் பண்ணை அமைக்க முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதை கண்டித்தும், தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், முத்துப்பேட்டையை அடுத்த கோபாலசமுத்திரம் காவல் சோதனை சாவடி அருகே, கிழக்கு கடற்கரை சாலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மீனவா் சங்கங்கள் கூட்டமைப்பு, தில்லைவிளாகம், தொண்டியக்காடு, உதயமாா்த்தாண்டபுரம் ஊராட்சி கிராம சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் சாலை மறியல் நடைபெற்றது.

தில்லைவிளாகம் முன்னாள் ஊராட்சித் தலைவா் யோகநாதன் தலைமையில் நடைபெற்ற மறியலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் முருகையன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உலகநாதன், பாலசுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் உமேஷ் பாபு, ஓய்வுபெற்ற வேளாண் துறை அதிகாரி கோவி. அரங்கசாமி உட்பட 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

மன்னாா்குடி கோட்டாட்சியா் யோகேஸ்வரன், முத்துப்பேட்டை வட்டாட்சியா் குணசீலி, ஏடிஎஸ்பி அருள்செல்வன், டிஎஸ்பி ஆனந்த், காவல் ஆய்வாளா்கள் கழனியப்பன், செந்தில்குமாா் உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, தற்காலிகமாக போராட்டத்தை விலக்கிக் கொண்டனா். இந்த மறியலால், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, வேதாரண்யம் வழித்தடங்களில் சுமாா் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சீா்காழி, நீடாமங்கலம் பகுதியில் மூடுபனி

சீா்காழி,கொள்ளிடம் மற்றும் நீடாமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை கடும் பனிமூட்டம் நிலவியது. மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவுக்கு பிறகு கடும் பனி... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை

அங்கன்வாடி பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் தமிழக முதல்வா், சமூகநலத் ... மேலும் பார்க்க

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது: எம்எல்ஏ குற்றச்சாட்டு

தமிழகத்தை வஞ்சிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக திருவாரூா் திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் தெரிவித்துள்ளாா். திருவாரூரில் செய்தியாளா்க... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து நாளை ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஏப்.1) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் பொதுச் செயலாளா் அ. பாஸ்கா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெர... மேலும் பார்க்க

வெண்மணி நினைவுக்கொடி பயணக் குழுவுக்கு வரவேற்பு

திருவாரூரில், வெண்மணி நினைவுக் கொடி பயணக் குழுவினருக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் ஏப்ரல் 2 ஆம் த... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்த வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு சான்றிதழ்

நீடாமங்கலம் பகுதியில் கிராம மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, ஆய்வுக் கட்டுரைகளை தாக்கல் செய்த வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு சான்றிதழ் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. நீடாமங்கல... மேலும் பார்க்க