செய்திகள் :

இறுதிக் கட்டத்தில் ஸ்பே டெக்ஸ் ஆய்வுத் திட்டம்

post image

விண்வெளிக்கு மனிதா்களை அனுப்புவதற்கான முன்னோட்ட முயற்சியாக செயல்படுத்தப்பட உள்ள ஸ்பேடெக்ஸ் ஆய்வுத் திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

அதன்படி அந்த விண்கலன்கள் பெங்களூரில் வடிமைக்கப்பட்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு விண்ணில் ஏவுவதற்காக அனுப்பப்பட்டுள்ளன.

அவற்றை ராக்கெட்டின் 4-ஆம் நிலையில் நிறுவும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035-க்குள் விண்ணில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஸ்பேடெக்ஸ் திட்டம் (நடஅஈஉல–நல்ஹஸ்ரீங் ஈா்ஸ்ரீந்ண்ய்ஞ் உஷ்ல்ங்ழ்ண்ம்ங்ய்ற்) தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின்படி விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதற்காக தலா 400 கிலோ எடை கொண்ட சேசா் மற்றும் டாா்கெட் எனும் 2 விண்கலன்களை இஸ்ரோ வழிகாட்டுதலில் தனியாா் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த இரட்டை விண்கலன்கள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வாயிலாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இந்த விண்கலன்கள் புவியில் இருந்து சுமாா் 700 கி.மீ. தொலைவில் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட உள்ளன.

விண்வெளி ஆய்வு மையம்: அதன் பின்னா் ஒன்றோடு ஒன்று அவை ஒருங்கிணைக்கப்படும். மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும்போது ஒரு விண்கலத்திலிருந்து மற்றொன்றுக்கு அவா்கள் மாறுவதற்கும், எரிபொருளை மாற்றிக்கொள்வதற்கும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படும். இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும் நிலையில் அமெரிக்காவைப் போன்று விண்வெளியில் இந்தியாவாலும் ஆய்வு மையத்தை அமைக்க முடியும்.

தற்போது ராக்கெட் பாகங்கள் ஒருங்கிணைப்பு, அதில் விண்கலன்களை பொருத்துதல் உள்ளிட்ட பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனா். திட்ட ஆய்வுக் குழுவின் ஒப்புதல் கிடைத்தவுடன் ஏவுதலுக்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிகிறது. டிச.30-இல் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படலாம் என முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெய்ப்பூர் ரசாயன லாரி விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு அறிவித்த பிரதமர் மோடி!

ராஜஸ்தானில் ரசாயன லாரி ஏற்படுத்திய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்தார்.ராஜஸ்தானில் வெள்ளிக்கிழமை (டிச. 20) அதிகாலையில் ரசாயன லாரி மோதி நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ப... மேலும் பார்க்க

அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகைக்கு எதிராக கேஜரிவால் மனு: ஜன.30ல் விசாரணை!

தில்லி கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிக்கை விசாரணை உத்தரவை எதிர்த்து முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு ஜனவரி 30ல் விசாரணை நடத்தப்படும் என்று தில்லி உயர்நீதி... மேலும் பார்க்க

ஓம் பிரகாஷ் சௌதாலா: பிரதமர் மோடி இரங்கல்

ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மறைவு மிகவும் வர... மேலும் பார்க்க

தில்லி பாஜக அலுவலகம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையால் பீதி

தில்லியில் உள்ள பாஜக மாநில அலுவலகம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு நிலவியது. தலைநகர் தில்லியில் பாஜக மாநில அலுவலகம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையால் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெடிகுண்டு பீதி... மேலும் பார்க்க

முகலாயப் பேரரசரின் சந்ததியினர் ரிக்‌ஷா இழுக்கின்றனர்! யோகி ஆதித்யநாத் சர்ச்சை பேச்சு

முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் வழித்தோன்றல்கள் ரிக்‌ஷா இழுப்பதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்... மேலும் பார்க்க

1984 என அச்சிடப்பட்ட கைப்பை: பிரியங்கா காந்திக்கு பரிசளித்த பாஜக எம்.பி.

காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ராவுக்கு 1984 என அச்சிடப்பட்ட கைப்பையை பாஜக எம்பி அபராஜிதா சாரங்கி பரிசாக வழங்கியுள்ளார். காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி பாலஸ்தீன் மற்றும் வங்கதேசம் பற்றிய செய்தி... மேலும் பார்க்க