டிஎஸ்கேவை வீழ்த்த உதவிய பொல்லார்டு..! சிஎஸ்கே ரசிகர்களை சீண்டிய மும்பை இந்தியன்ஸ...
இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பிஎஸ்ஜி..! ரியல் மாட்ரிட் (0-4) மோசமான தோல்வி!
கிளப் உலகக் கோப்பையில் அரையிறுதியில் ரியல் மாட்ரிட்டை 4-0 என வீழ்த்தி பிஎஸ்ஜி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் ஃபிஃபா கிளப் உலகக் கோப்பையில் அரையிறுதி போட்டிகள் முடிவடைந்துள்ளன.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய பிஎஸ்ஜி - ரியல் மாட்ரிட் போட்டி ஒரு பக்கமாகவே சென்றது.
இந்தப் போட்டியில் முதல் 25 நிமிஷங்களில் (6’, 9’, 24’) 3 கோல்களை அடித்து மிரட்டியது பிஎஸ்ஜி.
இரண்டாம் பாதியில் 870ஆவது நிமிஷத்திலும் பிஎஸ்ஜி ஒரு கோல் அடித்து 4-0 என பிஎஸ்ஜி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் பிஎஸ்ஜி அணி 69 சதவிகிதம் பந்தினை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. 92 சதவிகிதம் துல்லியமாக பந்தினை பாஸ் செய்து அசத்தியதும் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கிறது.
பிஎஸ்ஜி அணியில் 2 கோல்கள் அடித்த ஃபேபியன் ரூயிஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
பிஎஸ்ஜி அணி இலக்கை நோக்கி 7 முறை அடிக்க ரியல் மாட்ரிட் 2 முறை மட்டுமே முயற்சித்தது. அதையும் கோல் கீப்பர் தடுத்துவிட்டார்.
இறுதிப் போட்டியில் செல்ஸி அணியுடன் பிஎஸ்ஜி மோதுகிறது. நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் பரிதாபமாக தோல்வியுற்றது.