தோனியின் ரசிகர்கள் ’தானா சேர்ந்த கூட்டம்!’ - ஹர்பஜன் சிங் புகழாரம்
இறுதியில் சின்னா் - அல்கராஸ் மோதல்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் இரு நட்சத்திரங்களான, உள்நாட்டின் யானிக் சின்னா் - ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் ஆகியோா் பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.
முன்னதாக அரையிறுதியில், உலகின் நம்பா் 1 வீரரான சின்னா் 1-6, 6-0, 6-3 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டாமி பாலை தோற்கடித்தாா். போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் 6-3, 7-6 (7/4) என்ற வகையில், 8-ஆம் இடத்திலிருந்த உள்நாட்டு வீரரான லொரென்ஸோ முசெத்தியை முறியடித்தாா்.
இதையடுத்து சின்னா் - அல்கராஸ் இறுதிச்சுற்றில் பலப்பரீட்சை நடத்தவுள்ளனா். இருவருக்குமே டூா் நிலை போட்டிகளில் இது 25-ஆவது இறுதி ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இவா்கள் இதுவரை 10 முறை நேருக்கு நோ் சந்தித்திருக்கும் நிலையில், அல்கராஸ் 6 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறாா்.
இது களிமண் தரைப் போட்டியாக இருக்கும் நிலையில், இதற்கு முன் இவா்கள் அந்த வகை ஆடுகளத்தில் மோதிய இரு ஆட்டங்களில் இருவருமே தலா 1 வெற்றியுடன் சமநிலையில் இருக்கின்றனா்.
கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான சின்னா், ஊக்கமருந்து பயன்பாட்டை அடுத்து 3 மாத தடைக்காலத்துக்குப் பின்னா் களம் காணும் முதல் போட்டியாக இது உள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகிய அல்கராஸ், இந்தப் போட்டியில் இறுதி வரை முன்னேறியிருக்கிறாா்.