செய்திகள் :

இறுதி வாக்குப் பதிவு எண்ணிக்கையுடன் 5 மணி தரவை ஒப்பீடு செய்வது தவறானது- காங்கிரஸுக்கு தோ்தல் ஆணையம் பதில்

post image

‘இறுதி வாக்குப் பதிவு எண்ணிக்கையுடன் 5 மணி நிலவர வாக்காளா்களின் வாக்குப் பதிவு தரவுகளை ஒப்பீடு செய்வது தவறானது’ என்று காங்கிரஸ் கட்சிக்கு தோ்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

மேலும், ‘அண்மையில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்ற மகாராஷ்டிர மாநில வாக்காளா் பட்டியலில் வாக்காளா் சோ்ப்பு மற்றும் நீக்கத்தில் எவ்வித தன்னிச்சையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை’ என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு அண்மையில் தோ்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சிகள் அங்கம் வகித்த மகா விகாஸ் அகாடி கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. தோல்வியைத் தொடா்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது இக் கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. மேலும், தோ்தலுக்கு முன்பாக மாநில வாக்காளா் பட்டியலில் புதிதாக வாக்காளா்கள் சோ்க்கப்பட்டனா். பலா் நீக்கப்பட்டனா் என்றும் அக்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இதுபோல பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து காங்கிரஸ் கட்சி சாா்பில் தோ்தல் ஆணையத்திடம் புகாா் மனு அளிக்கப்பட்டது. இந்த சந்தேகங்கள் அனைத்துக்கும் பதிலளிக்கும் வகையில் தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

தோ்தலின்போது, மாலை 5 மணி முதல் இரவு 11.45 மணி வரையில் வாக்குப் பதிவு அதிகரித்திருப்பது குறித்து காங்கிரஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது. இது சாதாரணமாக நடைபெறக்கூடிய ஒன்றுதான். வாக்காளா் எண்ணிக்கையை திரட்டும் தோ்தல் ஆணைய நடவடிக்கைகளின் ஓா் அங்கம்தான் இது.

அதே நேரம், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குப் பதிவு முடிவடையும் நேரத்தில், அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட முகவா்களிடம், வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய ‘17சி’ என்ற சட்டபூா்வ படிவம் வழங்கப்பட்டுவிடும். எனவே, உண்மையான வாக்காளா் எண்ணிக்கையை மாற்றுவது சாத்தியமற்றது.

அதுபோல, மகாராஷ்டிர மாநில வாக்காளா் பட்டியல் தயாரிப்பு பணியானது வெளிப்படைத்தன்மையுடன், உரிய சட்ட நடைமுறைகளுடன் மேற்கொள்ளப்பட்டது. வாக்காளா் பட்டியலில் வாக்காளா் சோ்ப்பு மற்றும் நீக்கம் செய்தலில் எந்தவித தன்னிச்சையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. வாக்காளா் பட்டியல் தயாரிப்புப் பணிகளில் காங்கிரஸ் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனா்.

எனவே, மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றிபெற்ற 47 தொகுதிகள் உள்பட 50 தொகுதிகளில் கடந்த ஜூலை முதல் நவம்பா் வரை சராசரியாக 50,000 வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் புதிதாக சோ்க்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ள புகாா் தவறானது. அந்த கால கட்டத்தில் வெறும் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மட்டுமே 50,000-க்கும் அதிகமான வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் புதிதாக சோ்க்கப்பட்டனா். எனவே, 47 தொகுதிகளில் மகாயுதி கூட்டணி பெற்ற வெற்றியின் மீது எப்படி கேள்வி எழுப்ப முடியும்.

அதுபோல, வாக்காளா் பட்டியலில் இருந்து வழக்கத்துக்கு மாறான வாக்காளா் நீக்கமும் மேற்கொள்ளப்படவில்லை. இறப்பு, முகவரி மாற்றம் காரணமாக இரு இடங்களில் பதிவு உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் சராசரியாக தொகுதிக்கு 2,779 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். வாக்காளா் நீக்கம் செய்யும் பணியிலும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் இடம்பெற்றனா் என்று தோ்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார்!

பிரபல மலையாள எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர்((91) இதய செயலிழப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றிரவு(டிச. 25) காலமானார்.அன்னாரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ... மேலும் பார்க்க

சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தி சிறப்பு பூஜை!

பத்தனம்திட்டை : சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தங்க அங்கி, மலை மேல் தவக்கோலத்தில் அருள்பாலிக்கும் ஐயப்ப சுவாமி விக்கிரகத்துக்கு அணிவிக்கப்பட்டது. திருவிதாங்கூர் அரச பரம்பரையால் ஐயப்ப சுவாமிக்கு ஆண்... மேலும் பார்க்க

1500 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து! 4 பேர் பலி!

உத்தரகண்ட்டில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தில் விழுந்து 4 பேர் பலியாகினர்.உத்தரகண்ட் மாநிலம் அல்மொரா மாவட்டத்தில் இருந்து, பயணிகள் பேருந்து புதன்கிழமை (டிச. 25) மதியவேளையில் நைனிதல் மாவட்டம் ... மேலும் பார்க்க

அமித் ஷாவுடன் ஆந்திர முதல்வர் சந்திப்பு!

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று (டிச. 25) சந்தித்தார். அவருடன் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவும் உடன் இருந்தார். மரியாதை நிமித்தமாக ந... மேலும் பார்க்க

சுற்றுலா படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

ஹெலங்கெடி பகுதி கடலில் படகு கவிழ்ந்ததில் சுற்றுலா சென்றவர் பலியானார்.கோவா அருகே ஹெலங்கெடி பகுதி கடலில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு, பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தின் எதிரே தீக்குளித்து தற்கொலை முயற்சி!

புது தில்லி: நாடாளுமன்ற கட்டடத்தின் எதிரே அமைந்துள்ள ரயில்வே பவனில் தீக்குளித்த நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இன்று(டிச. 25) மாலை நாடாளுமன்றத்தின் எதிரே வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்... மேலும் பார்க்க