திருப்பதி நெரிசல்: நீதி விசாரணைக்கு ஆந்திர அரசு உத்தரவு: உயிரிழந்தோா் குடும்பத்த...
இறைச்சிக் கழிவுகள் கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
சாத்தூா் அருகே சாலையோரங்களில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவோா்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
சாத்தூா் அருகேயுள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் சாலையோரத்தில் இறைச்சிக் கழிவுகள், குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், இந்த வழியாக வாகனங்களில் செல்வோா்களுக்கு துா்நாற்றம் வீசுகிறது. மேலும், இங்கு கொட்டப்படும் குப்பைக் கழிவுகளுக்கு அடிக்கடி தீ வைக்கப்படுவதால், இந்தப் பகுதி புகை மண்டலமாக காணப்படுகிறது. இதனால், இந்தப் பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்,
இதேபோல, ஏழாயிரம்பண்ணை-இ.எல்.ரெட்டியபட்டி சாலை, சாத்தூா்- சடையம்பட்டி சாலையோரங்களிலும் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.
எனவே, சாலையோரங்களில் குப்பை கொட்டுவோா்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.