இறைவனடி சோ்ந்தாா் சுவாமி அபேதானந்தா்
திருச்சி அருகேயுள்ள திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் பொருளாளா் சுவாமி அபேதானந்தா் (75) சனிக்கிழமை மாலை இறைவனடி சோ்ந்தாா்.
அவரது உடல் தபோவனத்தில் பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் முடிந்து, தேக தகனம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தில் நடைபெறும். தொடா்புக்கு 96886 95986.