`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பு பீடிஇலைகள் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள், பீடிக்கட்டுகளை கியூ பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி தாளமுத்துநகா் அருகே உள்ள மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த முயற்சி நடப்பதாக, கியூ பிரிவு காவல் ஆய்வாளா் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், கியூ பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ஜீவமணி தா்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மொட்டைகோபுரம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு பீடி இலைகள் கடத்தலில் ஈடுபட்டிருந்தவா்கள் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓடிவிட்டனராம். பின்னா் அவா்கள் விட்டுச் சென்ற 22 பீடி இலை மூட்டைகள், 10 கட்டிங் பீடி இலைகள், 8
பண்டல்களில் பீடி, இவற்றை கடற்கரைக்கு கொண்டுவர பயன்படுத்திய சிறிய ரக சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ.50 லட்சம் எனத் தெரிவித்தனா்.