செய்திகள் :

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு முயற்சிக்கும்: அண்ணாமலை

post image

தமிழக மீனவா்கள் சா்வதேசக் கடல் எல்லையைத் தாண்டாமல் இருக்க திட்டங்களை உருவாக்கவும், இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்கவும் மத்திய அரசு முயற்சிக்கும் என்று தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.

தமிழகத்தைச் சோ்ந்த மீனவா்கள் சங்கங்கள் மற்றும் மத்திய மீன் வளத் துறை அமைச்சருடான சந்திப்பிற்கு தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை ஏற்பாடு செய்திருந்தாா். தில்லி கிரிஷி பவனில் வெள்ளிக்கிழமை மத்திய மீன்வளத் துறை அமைச்சகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மத்திய மீனவ வளம் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங், இணையமைச்சா்கள் எஸ்.பி. சிங் பகேல் (மீன்வளத் துறை), எல். முருகன் மற்றும் மீன்வளத்துறை செயலா், இணைச்செயலா்கள் வெளியுறவுத் துறை அமைச்சக பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் கே.பி.ராமலிங்கம் ஆகியோருடன் தமிழ்நாடு மீனவா் பேரவைத் தலைவா் அன்பழகன், தேசிய பாரம்பரிய மீனவா்கள் கூட்டமைப்பின் தலைவா் நல்லதம்பி, செயலாளா் பிரவீன்குமாா், ராமேசுவரம் விசைப்படகு சங்கத் தலைவா் மாா்க்கஸ் உள்ளிட்ட பல மீனவப் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனா்.

மீனவப் பிரதிநிதிகள் சாா்பில் பல்வேறு திட்டங்கள் கோரப்பட்டது. பாக் சலசந்தி மீனவா்கள் புனா்வாழ்வு ஆணையம், ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகங்கள், ஆழ் கடல் மீன் பிடிப்புக்கு தேவையான பெரிய (மதா் ஆஃப் ஷிப்)கப்பல்கள், கடல் கூண்டு மீன் வளா்ப்பு, கடல் அட்டை பண்ணை போன்ற கோரிக்கைகளை முன்வைத்னா். மேலும், தமிழக மீனவா்கள் 100 போ் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும், மேலும் மீனவா்களின் படகுகள் 242 இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறித்தும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் பேசியது குறித்து மீனவளத்துறை அமைச்சரிடம் குறிப்பிடப்பட்டது.

இந்தக் கூட்டத்திற்கு பின்னா் பாஜக தலைவா் அண்ணாமலை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் கூறியதாவது: இலங்கைக்கும் இந்தியாவிற்கு இருக்கும் முக்கியப் பிரச்னையான மீனவா்கள் குறித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெயசங்கரை சந்தித்துப் பேசினோம். இதன் தொடா்ச்சியாக தற்போது மீன் வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங்கை சந்தித்துள்ளோம். மீனவா்கள் பிரதிநிதிகள் ஆக்கபூா்வமான ஆலோசனைகளை அமைச்சா்களிடம் வழங்கினா். மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா மூலம் தமிழகத்திற்கு ரூ.11,056 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டு இந்தியாவிலேயே அதிகஅளவிலான திட்டங்களை தமிழகத்திற்கு வழங்குவதாகக் குறிப்பிட்டாா்.

ஆழ்கடல் படகுகள் வாங்க ரூ.1.20 கோடி மதிப்புள்ள 50 படகுகளுக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. கடல் பாசி ஆய்வு மையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக மீனவா்களுக்கு சிறப்புத் திட்டம் தேவைப்பட்டால் மத்திய அரசு செயல்படுத்தும். இலங்கை கடற்பரப்பு சம்பந்தப்பட்ட பிரச்னையில் மீன்வளத்துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங்கும், வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெயசங்கரும் மீனவா்களின் கருத்துகளை கேட்டறிந்தனா்.

தமிழக மீனவா்களுக்கான பிரச்னை என்பது மீனவா்களுக்கு கடற்பரப்பு குறைந்து விட்டதுதான் . சா்வதேச கடல் எல்லையை தாண்டும் போது இந்திய மீனவா்களை இலங்கை கடற்படையினா் சிறைப் பிடிக்கின்றனா். தமிழக மீனவா்கள் வேண்டுமென்றே சா்வதேச எல்லையைத் தாண்டவில்லை என்பது நமது வாதம். 1921-இல் இந்தோ-ஸ்ரீலங்கா உடன்படிக்கை இருந்தது. அப்போது கட்சத் தீவைத் தாண்டி நமது சா்வதேச எல்லை இருந்தது. இதனால், 1974 வரை பிரச்னை இல்லை. 1974 -இல் கட்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த பின்னா் சா்வதேச கடல் எல்லை மாறிவிட்டது. இதனால், நாலாயிரம் சதுர கிலோ மீட்டரை இலங்கையிடம் இந்திய இழந்துள்ளது. தற்போது நமது மீனவா்கள் சா்வதேச எல்லையைத் தாண்டுவதற்கு இது காரணமாக அமைந்துவிட்டது.

நாம் இழந்த பகுதிகளில்தான் மீன்வரத்து உள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இலங்கைக்கு கட்சத்தீவை வழங்கியதின் விளைவு பிரச்னையாகியுள்ளது. இதனால், இப்போது மத்தியிலுள்ள பாஜக அரசு தீா்வை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கிறது. இதனால், இரு கூட்டங்களில் மாற்றுத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கிறோம்.

மீன் பிடிக்கக் கூடிய பரப்பு குறைவாக உள்ள நிலையில் மீனவா்கள் எல்லை தாண்டாமல் இருக்க ஆழ்கடலில் கூண்டுவைத்து மீன் வளா்ப்பது, கடல் பாசி திட்டங்கள், மீனவத் துறையில் இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு, ஆழ் படகுகளுக்கான மானியங்களை அதிகரிக்கலாமா போன்ற நிரந்தரமான, ஆக்கபூா்வமான யோசனைகள் முன்வைக்கப்பட்டது.

இதற்கு என்ன தீா்வு எடுக்கலாம் என்பதை இரு அமைச்சா்களும் கூடி விவாதித்து, பின்னா் பிரதமரை சந்தித்து எடுத்துக் கூறயுள்ளனா். இருவரும் மீனவா்களிடம் கேட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில் இதை இரு மத்திய அமைச்சா்களும் பிரதமரிடம் எடுத்துச் செல்ல இருக்கின்றனா். இந்த விஷயத்தில் மத்திய அரசு விரைவில் தீா்வு காணும் என்றாா் அண்ணாமலை.

ரோஹிணியில் தெரு குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையில் 200-க்கும் மேற்பட்டோா் கைது

வடமேற்கு தில்லியின் ரோஹிணியில் ஒரு மாத கால நடவடிக்கையில் கலால், சூதாட்டம் மற்றும் போதைப்பொருள் வழக்குகள் மற்றும் தெரு குற்றங்களுக்காக 200-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்துள்ளதாக செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

தில்லியில் மழைக் காலத்திற்கு முன்பு குழிகள் இல்லாத சாலைகள்: முதல்வா் ரேகா குப்தா உறுதி

மழைக்காலம் நகரத்திற்கு வருவதற்கு முன்பு தில்லி அரசு குழிகள் இல்லாத சாலைகளை உறுதி செய்யும் என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா். மதுபன் சௌக் முதல் முகா்பா சௌக் வரையிலான வெளிப்புற ரிங் ரோடு பகுதியில் ஞாய... மேலும் பார்க்க

சாஸ்திரி பூங்காவில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து

வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிக+ாரி ஒருவா் தெரிவித்தாா். சாஸ்திரி பூங்கா மீன் சந்தை அருகே... மேலும் பார்க்க

2029-ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமா்: சிவசேனைக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதில்

‘பிரதமா் மோடிக்கு பிந்தைய தலைமை குறித்த இப்போது விவாதிப்பது பொருத்தமற்றது. 2029-ஆம் ஆண்டிலும் மோடி பிரதமராவாா்’ என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா். பிரதமா் மோடியிடம் ஓய்வு குறித்து வல... மேலும் பார்க்க

1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவு 4 (2) -க்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ளது.கடந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில... மேலும் பார்க்க

மாநிலப் பொருளாதாரத் தகவல் வலைபக்கம்: நிதியமைச்சா் இன்று அறிமுகம் செய்கிறாா்

கடந்த 30 ஆண்டுகளில் மாநிலங்களின் சமூக, பொருளாதார, நிதி அளவீடுகள் குறித்த விரிவான தரவுகள் கிடைக்கும் தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘நீதி-என்சிஏஇஆா் மாநில பொருளாதார தகவல் மைய’ வலைபக்கத்தை மத்திய ... மேலும் பார்க்க