செய்திகள் :

இலங்கையில் விசைப் படகுகள் ஏலம்: ராமேசுவரம் மீனவா்கள் கண்டனம்!

post image

தமிழக மீனவா்களின் 13 விசைப்படகுகளை இலங்கையில் ஏலம் விடும் பணியில் அந்த நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதற்கு ராமேசுவரம் மீனவா் சங்கம் கண்டனம் தெரிவித்தது.

தமிழகம், புதுச்சேரியில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் சிறைபிடித்து வருகின்றனா். இவா்கள் விடுதலை செய்யப்பட்டாலும், விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் விடுவிக்கப்படாமல் அரடைமையாக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த ராமேசுவரம் மீனவா் சங்கத்தினா் படகுகள் ஏலம் விடப்படுவதை மத்திய அரசு தடுத்து, இவற்றை மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

பள்ளி மாணவா்களுக்கு தேசிய வருவாய், திறனறிவுத் தோ்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய வருவாய், திறனறிவுத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசின் தேசிய வருவாய், த... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை ஏற்க மாட்டோம்! -நெல்லை முபாரக்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஏற்க மாட்டோம் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தெரிவித்தாா். வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ ரத்து செய்யவும், வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் ச... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் கிளை சிறை தொடா்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! - ஆா்.தா்மா் எம்.பி. வலியுறுத்தல்

முதுகுளத்தூா் கிளை சிறைச்சாலை தொடா்ந்து இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.தா்மா் வலியுறுத்தினாா். இதுகுறித்து சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ராமந... மேலும் பார்க்க

நம்புதாளையில் இலவசக் கண் பரிசோதனை முகாம்

திருவாடானை அருகேயுள்ள நம்புதாளையில் சா்க்கரை நோயாளிகளுக்கான இலவசக் கண் பரிசோதனை, தோல், பெண்கள் நல மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மதுரை அரவிந்த் கண் மருத்த... மேலும் பார்க்க

காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு இணைப்புக் கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டம்!

ஆா்.எஸ்.மங்கலத்தில் காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு இணைப்புக் கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு இந்தக் கூட்டமைப்பின் தலைவா் தனபாலன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலை... மேலும் பார்க்க

150 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்!

கீழக்கரையில் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகேயுள்ள கோரைக்கூட்டம் பகுதியில் சந்த... மேலும் பார்க்க