செய்திகள் :

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 27 மீனவா்கள் சென்னை வந்தனா்

post image

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த 27 மீனவா்கள் விமானம் மூலம் சென்னை வந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்திலிருந்து கடந்த டிச.23-ஆம் தேதி மீன் பிடிப்பதற்காகச் சென்ற 13 மீனவா்கள் மற்றும் ராமேசுவரத்திலிருந்து கடந்த ஜன.26-ஆம் தேதி சென்ற 14 மீனவா்கள் என மொத்தம் 27 மீனவா்கள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டனா்.

அவா்களின் படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை ராணுவத்தினா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில் தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்களின் உறவினா்கள் கோரிக்கை விடுத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா்.

இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையின்பேரில், கைது செய்யப்பட்ட 27 மீனவா்களும், இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதன்கிழமை இரவு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தனா். அவா்களை தமிழ்நாடு மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்று, தமிழக அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனங்கள் மூலம் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைத்தனா்.

சம்மனை நான்தான் கிழிக்கச் சொன்னேன்: சீமான் மனைவி

வளசரவாக்கம் காவல்துறையினர் வீட்டின் முன்பு ஒட்டிய சம்மனை, படிப்பதற்காக நான்தான் கிழிக்கச் சொன்னேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி தெரிவித்துள்ளார்.காவல்துறையினரின... மேலும் பார்க்க

இரு மொழிக் கொள்கையால் வேலைவாய்ப்புகளை இழக்கும் இளைஞர்கள்: ஆளுநர் வேதனை

தமிழ்நாடு பின்பற்றும் இருமொழிக் கொள்கையால் இங்குள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழப்பதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழகத்துக்கு கல்வி நிதி அளிக... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 அதிரடியாக வெள்ளிக்கிழமை குறைந்துள்ளது.கடந்த சில நாள்களாக தங்கம் விலை அதிரடி ஏற்றத்தைக் கண்டு வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டு... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் இன்று ஆஜராகிறார் சீமான்!

நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் இன்று மாலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக சீமான் மீத... மேலும் பார்க்க

200 தொகுதிகளில் திமுக வெல்லும்: பிரசாரத்தில் மீண்டும்

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுகதான் ஆட்சி அமைக்கும் என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.தமிழகம், கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்க மாநிலங்களுக்கு அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்... மேலும் பார்க்க

மொழிப் போரில் தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும்! -முதல்வர் ஸ்டாலின்

மொழிப் போரில் தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.... மேலும் பார்க்க