அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்துக்கு புதிய திட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு!
இலங்கை தேர்தல்: அநுரகுமார திசாநாயக அமோக வெற்றி!
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கடந்ததால் அநுரகுமார திசாநாயகவின் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் முதல் இடதுசாரி அதிபராக பொறுப்பேற்ற அநுரகுமார திசாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, நாடாளுமன்ற தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.
இலங்கையில் வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகின்றன.
காலை 10.30 மணி நிலவரப்படி, தேசிய மக்கள் சக்தி 123 இடங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 31 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
இலங்கை தமிழ் அரசு கட்சி - 3
புதிய ஜனநாயக முன்னணி - 3
இலங்கை பொதுஜன கட்சி - 2
ஐக்கிய தேசிய கட்சி - 1
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு - 1
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் - 1
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி 61.7 சதவிகித வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 17.72 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளன.
இதையும் படிக்க : அதானி வீட்டில்தான் அதிகாரப் பகிர்வு பேச்சு நடந்தது! சரத் பவார்
கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னா் நடைபெற்ற இந்தத் தோ்தலில், 65 சதவீதம் போ் வாக்களித்திருக்கக் கூடும் என்று தோ்தல் ஆணையம் கணித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 இடங்களில் தனிப் பெரும்பான்மை பெற 113 இடங்கள் தேவையென்ற நிலையில், தேசிய மக்கள் சக்தி 123 இடங்களை கடந்துள்ளது.
இதன்மூலம் வலுவான நாடாளுமன்றத்தை அநுரகுமார திசாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அமைக்கவுள்ளது.