ஈரோடு இடைத்தேர்தல்: ``நிச்சயம் நியாயமாக நடக்காது என்பதால்..'' -எடப்பாடி பழனிசாமி...
இலங்கை தொடரில் மீட்சி அடைவேன் : மெக்ஸ்வீனி
இலங்கை டெஸ்ட் தொடரில் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவேன் என ஆஸி. இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனி கூறியுள்ளார்.
பார்டர் - கவாஸ்கர் தொடரில் அறிமுகமான இளம் ஆஸி. வீரர் நாதன் மெக்ஸ்வீனி 4ஆவது போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக களமிறங்கிய சாம் கான்ஸ்டாஸ் அதிரடியாக விளையாடி கவனம் பெற்றார்.
குறிப்பாக பும்ராவிடம் ஆட்டமிழந்த மெக்ஸ்வீனியைவிட பும்ரா ஓவரில் சிக்ஸர் அடித்த கான்ஸ்டாஸ் உலகம் முழுவதும் கவனம் பெற்றார்.
25 வயதாகும் மெக்ஸ்வீனி முதல் 3 டெஸ்ட்டில் 72 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். தற்போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கடைசி சுற்று தொடரில் இலங்கை உடனான தொடரில் ஆஸி. அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நாதன் மெக்ஸ்வீனி கூறியதாவது:
குழப்பமான சில மாதங்களுக்குப் பிறகு தற்போது நன்றாக இருக்கிறது. இலங்கைதொடருக்கு என்னை அழைத்துள்ளது முன்னதைவிடவும் நல்ல முடிவு. முதல் 3 டெஸ்ட்டுகளில் இருந்து நான் மிகுதியாக கற்றுக்கொண்டேன். அதிலிருந்து அனுபவங்களைப் பெற்ற நான் இலங்கை தொடரில் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக செயல்படுவேன்.
சந்தேகமே இல்லாமல் இது ஒரு மிகப் பெரிய சவால். அதற்காக நான் தயாராக இருக்கிறேன். ஆஸ்திரேலியாவில் சுழல் பந்துகளை விளையாடுவதற்கும் இலங்கையில் சுழல் பந்துகளை விளையாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
நான் ஆஸி.யில் சுழல் பந்துகளை நன்றாக விளையாடியது எனக்கு ஷீல்டு தொடரில் மிகவும் உதவியது. ஆனால், இலங்கையில் சிறப்பாக செயல்பட நான் இன்னும் கூடுதலாக ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்றார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸி. , தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவிருக்கின்றன.
ஜன.29 முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் தொடங்குகிறது. பிப்.6ஆம் தேதி 2ஆம் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.
ஆஸி. அணி:
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஷான் அப்பாட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கான்னொலி, டிராவிஸ் ஹெட் (து.கே), ஜோஷ் இங்கிலீஷ், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மாட் குன்னஹ்மன், மார்னஸ் லபுஷேன், நாதன் லயன், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்பி, மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.