செய்திகள் :

இலங்கை - நியூசிலாந்து கடைசி ஒருநாள் போட்டி மழையால் ரத்து!

post image

இலங்கை - நியூசிலாந்து கடைசி ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை - நியூசிலாந்து கடைசி ஒருநாள் போட்டி இலங்கையில் பல்லெகலேயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மிட்சல் சான்ட்னர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி, முதலில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிம் ராபின்சன் 9 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, அவருக்குப் பின்னர் வந்த வில் யங், ஹென்ட்ரி நிக்கோலஸ் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

21 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அப்போது வில் யங் 56 ரன்களுடனும், ஹென்ட்ரி நிக்கோலஸ் 46 ரன்களுடனும் எடுத்திருந்தனர்.

ஆட்டம் முழுமையாக மழையால் பாதிக்கப்பட்டதால், ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்தத் தொடரில் முதலாவது போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது போட்டியிலும் 3 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றிருந்தது. இதன் மூலம் இலங்கை அணி 2-0 என்ற வித்தியாத்தில் தொடரை வென்றது.

இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி டிசம்பர் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: சௌரவ் கங்குலி கூறுவதென்ன?

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்... மேலும் பார்க்க

நடத்தை விதிகளை மீறிய தெ.ஆ. பந்துவீச்சாளருக்கு அபராதம்!

ஜோகன்னஸ்பர்க்கில் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின் போது நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு தெரிவித்ததற்காக தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஜிக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு பேட்டிங் பயிற்சியாளர் நியமனம்; ஆஸி.க்கு எதிரான தோல்வி காரணமா?

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஷாகித் அஸ்லாம் நியமிக்கப்பட்டுள்ளார்.முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் க... மேலும் பார்க்க

இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பிய தெ.ஆ. கேப்டன்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வங்கதேசத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் 2-0 என்ற கணக்கில் வென்ற தென்னாப்பிரிக்க அணி இலங்க... மேலும் பார்க்க

விராட் கோலியை சீண்டி விடாதீர்கள்; ஆஸி. வீரர்களுக்கு ஷேன் வாட்சன் அறிவுரை!

பார்டர் - கவாஸ்கர் தொடரில் விராட் கோலியை ஆஸ்திரேலிய வீரர்கள் சீண்ட வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் அறிவுரை கூறியுள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்க... மேலும் பார்க்க

உலகக் கோப்பை தோல்வி..! இந்திய ரசிகர்கள் சோகம்!

ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியுற்று ஓராண்டு நிறைவையொட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையின் இறுதிப... மேலும் பார்க்க