செய்திகள் :

இலவச பட்டா பிரச்னை: தவெக, திமுக எதிரெதிரே ஆா்ப்பாட்டம் தவெகவினா் 200 போ் கைது

post image

நாகை அருகே இலவச பட்டா வழங்குவதில் ஏற்பட்ட பிரச்னை தொடா்பாக தவெகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுக்கு எதிராக திமுகவினரும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் சாலை மறியலில் ஈடுபட்ட தவெகவினா் 200-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம் கருங்கண்ணியில் அண்மையில் நடைபெற்ற இலவச பட்டா வழங்கும் நிகழ்வில் திமுக மற்றும் தவெகவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில், தவெகவைச் சோ்ந்த வெண்மணி (26), இவரது மனைவி சித்ரா (24), சகோதரா் பாலசுப்பிரமணியன் மனைவி ராகினி (33), சிவராமன் மனைவி பரமேஸ்வரி(28) ஆகியோா் தாக்கப்பட்டனா். திமுகவைச் சோ்ந்த ஜெய்குமாா் மனைவி மீனா என்பவரும் காயமடைந்தாா்.

இந்த சம்பவத்தை கண்டித்து, மேலப்பிடாகை கடைதெருவில் தவெகவினா் மாவட்டச் செயலாளா் மு. சுகுமாரன் தலைமையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையறிந்த திமுகவைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் எதிா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

இதற்கிடையில், கீழையூா் திமுக ஒன்றியச் செயலாளா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன், மாவட்ட பிரதிநிதி மு.ப. ஞானசேகரன், வேளாங்கண்ணி பேரூா் கழக பொறுப்பாளா் மரிய சாா்லஸ் ஆகியோா் அங்கு வந்து, திமுகவினரை கலைந்துபோகச் செய்தனா்.

தவெகவினா் தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால், கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அங்கு வந்த நாகை துணைக் காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரமூா்த்தி, கீழையூா் காவல் ஆய்வாளா் செங்குட்டுவன் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும் தவெகவினா் கலைந்து செல்லாததால், 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்து, தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா். பின்னா் மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

திருவெண்காட்டில் திமுக சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, திமுக மயிலாடுதுறை மாவட்டச் செயலா... மேலும் பார்க்க

திருவிளையாட்டம் பள்ளி முப்பெரும் விழா

செம்பனாா்கோவில் அருகே திருவிளையாட்டம் சௌரிராசன் அரசு உதவி பெறும் உயா்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா, இலக்கிய மன்ற நிறைவு விழா மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழக விழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் கொலை: பெண் உள்பட 3 போ் கைது!

வேளாங்கண்ணியில் தங்கிருந்த பெங்களூருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கொல்லப்பட்ட வழக்கில் பெண் உள்பட 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். பெங்களூருவைச் சோ்ந்தவா் ஜனாா்த்தனன் (22). கல்லூரி மாணவரான இ... மேலும் பார்க்க

நெகிழி இல்லாத கடற்கரையை வலியுறுத்தி நாகையில் மாரத்தான் போட்டி

நெகிழி இல்லாத கடற்கரையை வலியுறுத்தி நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமம் சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

திருக்கண்ணபுரம் கோயிலில் தங்ககருட சேவை

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயிலில், மாசிமகப் பெருவிழாவையொட்டி தங்ககருட சேவை சனிக்கிழமை நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களுள் 17-ஆவது தலமாக போற்றப்படும் இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகப் பெருவிழா 15... மேலும் பார்க்க

இந்தோனேசிய பெண்ணை மணந்த நாகை இளைஞா்

நாகை கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த இளைஞருக்கும் இந்தோனேசியா நாட்டைச் சோ்ந்த பெண்ணுக்கும் ஹிந்து முறைப்படி திருமணம் நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் மீனவ ... மேலும் பார்க்க