Jessica Radcliffe : Trainer-ஐ தாக்கிக் கொன்றதா Dolphin? Orca | Ramky Group Imper...
இல.கணேசன் மறைவு: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் இரங்கல்!
நாகாலாந்து ஆளுநா் இல. கணேசன் மறைவுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் இரங்கல் தெரிவித்தாா்.
இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேகாலய மாநில முன்னாள் ஆளுநா், பாரதிய ஜனதா கட்சியின் தேசியக் குழு முன்னாள் தலைவா், எல்லோரிடமும் அன்பு காட்டுகின்ற, தோழமை காட்டுகின்ற, நல்லிணக்கம் காட்டுகின்ற மனிதநேயா் இல. கணேசனின் மறைவு நமக்கு மிகப்பெரிய பேரிழப்பாகும்.
நமக்கு மட்டு மல்ல; தேசத்துக்கும் நாட்டுக்கும் மிகப்பெரிய பேரிழப்பாகும். அவரது இறப்பால் துயருறும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.