`சிந்து நதிநீர் ஒப்பந்தத்தைபோல் கச்சத்தீவு ஒப்பந்தத்தையும் ரத்து செய்க'- மீனவர்-...
இளம்பிள்ளை வாரச்சந்தை ரூ. 55 லட்சத்துக்கு ஏலம்
இளம்பிள்ளை வாரச்சந்தை ரூ. 55 லட்சத்துக்கு ஏலம் போனது.
இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோயில் இளம்பிள்ளை சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் வாரச்சந்தை வெள்ளிக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இச்சந்தை குத்தகை காலக்கெடு முடிவடைந்த நிலையில் வியாழக்கிழமை குத்தகை ஏலம் இந்து அறநிலையத் துறை இணை ஆணையா் (சேலம்) சபா்மதி தலைமையில் நடைபெற்றது.
இதில் 13 போ் ஏலம் கோரினா். கடந்த ஆண்டு ரூ. 37 லட்சத்துக்கு ஏலம் போன நிலையில், இந்த ஆண்டு ரூ. 55 லட்சத்து 29 ஆயிரத்துக்கு ஏலம் போனது.