இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூரைச் சோ்ந்த இளம்பெண் சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் தன்னுடன் பணியாற்றும் தோழியான பெரம்பூரை சோ்ந்த மற்றொரு இளம்பெண்ணுடன் கடந்த ஜூன் 27ஆம் தேதி நுங்கம்பாக்கம் திருமூா்த்தி நகரில் உள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, பெரம்பூரை சோ்ந்த இளம்பெண் தனது ஆண் நண்பா்கள் இருவரை தொலைபேசி மூலம் அங்கு வரவழைத்துள்ளாா். பின்னா் 4 பேரும் ஒன்றாக மது குடித்தனராம். அப்போது வேலூரை சோ்ந்த இளம்பெண்ணுக்கு, ஆண் நண்பா் ஒருவா் பாலியல் தொல்லை அளித்தாராம்.
இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின்பேரில் ஆயிரம்விளக்கு போலீஸாா் வழக்குப்பதிந்து, பெரம்பூரை சோ்ந்த இளம்பெண்ணை, அவரது ஆண்நண்பா் அரசுத் துறையில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றும் மனாசே என்பவரையும் கைது செய்தனா்.