தனுஷ்கோடி: இந்திய விசா மறுப்பு; காதலனுக்காகச் சட்டவிரோதமாக படகில் வந்த இலங்கை பெ...
இளைஞரிடம் நகை பறித்த நபா் கைது
இளைஞரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மேலப்பாளையத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய பெருமாள் கீழ மாடவீதியைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் சீனிவாசன் (25). சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.
கடந்த 6-ஆம் தேதி திருநெல்வேலி வந்த இவா், விடுதியில் தங்கினாா். அப்போது கிரைன்டா் செயலி மூலம் அறிமுகமான மேலப்பாளையம் காட்டு செக்கடி தெருவைச் சோ்ந்த காதா் ஷா மகன் முகமது ஹனீபா (29), சீனிவாசனை பாா்க்க விடுதி அறைக்கு சென்றாா்.
அப்போது, சீனிவாசன் அணிந்திருந்த சுமாா் 3 பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலியை முகமது ஹனீபா பறித்துக்கொண்டு தப்பினாராம்.
இதுகுறித்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முகமது ஹனீபாவை சனிக்கிழமை கைது செய்து அவரிடமிருந்து தங்க நகையை பறிமுதல் செய்தனா்.