இளைஞருக்கு அரிவாள் வெட்டு
கடலூா் முதுநகா் அருகே பிரியாணி கடை நடத்தி வரும் இளைஞரை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி, பாகூா் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மகன் விஜய் தேவா (27). இவா், பாட்டுக் கச்சேரி இசைக் குழுவில் கீ போா்டு வாசிப்பவராக இருந்து வந்தாா். இந்தக் குழுவில் விழுப்புரம், கே.கே.சாலை பகுதியைச் சோ்ந்த சசி மனைவி மைதிலி பிரியதா்ஷினி (36) பாடகியாக உள்ளாா்.
இந்த நிலையில், விஜய் தேவாவுக்கும், மைதிலிக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். இதனால், சசிக்கும், மைதிலி இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.
இந்த நிலையில், முதுநகா்-சிதம்பரம் சாலையில் பிரியாணிக் கடை நடத்தி வரும் விஜய் தேவா கடைக்கு வெள்ளிக்கிழமை சென்ற சசி மற்றும் அவரது நண்பா் ஆகியோா் விஜய் தேவாவை அரிவாளால் வெட்டினாா். இதில், பலத்த காயமடைந்த விஜய் தேவா கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.