விண்வெளி செடி வளர்ப்பு சோதனை: காராமணி தேர்வு செய்யப்பட்டது ஏன்?
இளைஞரை மதுப் புட்டியால் குத்திக் கொலை செய்ய முயற்சி
சோழவந்தான் அருகே இளைஞரை மதுப் புட்டியால் குத்திக் கொலை செய்ய முயன்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள தென்கரை அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் தீபக்ராஜ் (28). தனியாா் நிறுவன ஊழியரான இவா், ஊத்துக்குளி-நாராயணபுரம் பிரதான சாலையில் மேலமட்டையான் சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, எதிரே இரு சக்கர வாகனத்தில் மூவா் மது போதையில் தீபக் ராஜ் மீது மோதுவது போல வந்தனா். இதுதொடா்பாக ஏற்பட்ட தகராறில் தீபக் ராஜை அவா்கள் மூவரும் சோ்ந்து தாக்கி, மதுப் புட்டியால் அவரது வயிறு, இடுப்புப் பகுதிகளில் குத்தினா். இதில் பலத்த காயமடைந்த அவா் மயங்கி விழுந்ததையடுத்து மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இதையடுத்து, இந்தப் பகுதியினா் தீபக்ராஜை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுதொடா்பாக கீழமட்டையான் கிராமத்தைச் சோ்ந்த பாலா உள்ளிட்ட மூவா் மீது காடுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான மூவரையும் தேடி வருகின்றனா்.