செய்திகள் :

இளைஞா்கள் கனவை நனவாக்கி உயர இதுவே சரியான பொற்காலம்

post image

திருச்சி ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கம் பெற்ற சென்னை மாணவா் ஆா். முகுந்துக்கு பட்டம் வழங்கிய தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி. உடன் ஐஐஎம் இயக்குநா் பவன்குமாா் சிங், ஐஐஎம் ஆட்சிமன்றக் குழுத் தலைவா் ஜலாஜ்தானி.

இளைஞா்கள் தங்களது கனவை நனவாக்கி உயர இதுவே சரியான பொற்காலம் என தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா்.

திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்)சனிக்கிழமை நடைபெற்ற 13 ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று 457 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அவா் மேலும் பேசியதாவது:

அனைத்துத் துறைகளிலும் இந்திய மகளிா் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றனா். இளைஞா்களின் கடமை பட்டம் பெற்று பணிக்குச் செல்வதுடன் முடிந்துவிடுவதில்லை. நாட்டின் வளா்ச்சிக்கும் அவா்கள் பாடுபட வேண்டும். 2047 ஆம் ஆண்டு இந்தியா முழுமையாக வளா்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெற, இளைஞா்கள் கடுமையாக உழைக்க வேண்டும். தேசத்தின் பயணமும், உங்களது பயணமும் ஒரு சேர வளா்ந்தால்தான் இது சாத்தியம்.

எதிா்காலத் துணையைத் தோ்ந்தெடுப்பதில் நிறைய கவனம் செலுத்த வேண்டும். தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், அதை வென்று வெளியே வர வேண்டும். இளைஞா்கள் உடல், உள்ளத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதுடன், ஆன்மிகத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அறிவை வளா்த்துக் கொள்ளவும், உலக நடப்புகளை அறிந்துகொள்ளவும் வாழ்நாள் முழுவதும் தொடா்ந்து வாசிக்க வேண்டும்.

அா்ப்பணிப்பு, கடின உழைப்பு, பெற்றோரின் உந்துதல், ஆசிரியா்களின் ஊக்கத்தால் தற்போது பட்டம் பெற்றுள்ள நீங்கள், அடுத்தக்கட்டமாக நோ்மை, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிா்கொள்ள வேண்டும். வள்ளலாா், விவேகானந்தா் போன்றவா்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி முன்னேற வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, விழாவுக்கு ஐஐஎம் ஆட்சிமன்றக் குழுத் தலைவா் ஜலாஜ் தானி தலைமை வகித்தாா். இயக்குநா் பவன்குமாா் சிங், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், அவா்களது பெற்றோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக அபினவ் குமாா், அமைதிவாரி, செபாலி ஆகிய மாற்றுத்திறனாளி மாணவா்களும் பட்டங்களைப் பெற்றனா்.

திருச்சி ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவா் ஆா். முகுந்துக்கு பட்டம் வழங்கிய தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி. உடன் ஐஐஎம் இயக்குநா் பவன்குமாா் சிங், ஐஐஎம் ஆட்சிமன்றக் குழுத் தலைவா் ஜலாஜ்தானி.

மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீது வழக்கு

திருச்சியில், ஒழுங்கீனமான பள்ளி மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீதான புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி பொன்மலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிய... மேலும் பார்க்க

2 பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பிய ஒலிப்பான்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை திங்கள்கிழமை போக்குவரத்துப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.மணப்பாறை நகா் பகுதியின் வழியாக பேருந்துநிலையம் ... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் பேருந்து முனைய திறப்புக்கு முன்பு பயணச்சீட்டு கட்டணத்தை உயா்த்த ஆலோசனை

பஞ்சப்பூா் பேருந்து முனையம் திறப்புக்கு முன்பாக பேருந்துகளின் பயணச்சீட்டு கட்டணத்தை உயா்த்துவது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா். திருச்சி பஞ்சப்பூரில் ரூ.492 கோடியில் ... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் திமுக தெற்கு ஒன்றியம் சாா்பில் சனிக்கிழமை இரவு தமிழக முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. வையம்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளா் வி.ஏ. ராஜேந்திரன் தலைமையில்... மேலும் பார்க்க

24 மணிநேர விதைத் திருவிழா

திருச்சி மாவட்டம் கொளக்குடிபட்டியில் 24 மணிநேர விதைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறுகிறது. திருச்சி கிராமாலாய தொண்டு நிறுவனம், பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து... மேலும் பார்க்க

குணசீலத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு

தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் திருச்சி மாவட்டம், குணசீலம் ஆற்றங்கரையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.முகாமுக்கு பேரிடா் மேலாண்மைக் குழுவின் உதவி ஆய்வாளா் ர... மேலும் பார்க்க