இளைஞா் சடலம் மீட்பு
கடலூா் ரெட்டிசாவடி அருகே இறந்து கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
ரெட்டிசாவடி காவல் சரகம், சின்ன கங்கணாங்குப்பம் பகுதியில் மண் சாலை ஓரத்தில் சுமாா் 35 வயது மதிக்கத்தக்க ஊா், பெயா் தெரியாத இளைஞா் இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து சின்னகங்கணாங்குப்பம் கிராம நிா்வாக அலுவலா் முகம்மது உசேன் அளித்த புகாரின்பேரில், ரெட்டிசாவடி போலீஸாா் இளைஞரின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக ரெட்டிசாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.