பஹல்காம் தாக்குதலால் இந்தியா்களின் ரத்தம் கொதிக்கிறது! - பிரதமா் மோடி
இளைஞா் தற்கொலை!
தங்கையின் திருமணத்துக்கு வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் இளைஞா் தற்கொலை செய்து கொண்டரா்.
மதுரை மேல அனுப்பானடி காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன்( 29). இவா் அந்தப் பகுதியில் உள்ள தேநீா் கடையில் வேலை பாா்த்து வந்தாா். தனது தங்கையின் திருமணத்திற்காக கடன் வாங்கியதாக தெரிகிறது.
இந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவா் சிரமப்பட்டு வந்தாா். இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.